நிகழ்வுகள் :-


👉 1955ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி கலிஃபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் துவக்க நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.

👉 1975ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும், சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற்தடவையாகும்.

👉 1953ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவடைந்தது.


முக்கிய தினம் :-


சர்வதேச உலக நீதி தினம்

👉 சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

👉 சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சனைகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


பிறந்த நாள் :-


பாரதிராஜா


👉 கிராமத்து எழிலோடு மண்வாசனை மாறாமல் தன்னுடைய கற்பனையை விருந்தளித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா 1941ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தேனி அல்லி நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னச்சாமி.

👉 சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர், சினிமா மேலிருந்த ஈடுபட்டால் சென்னைக்குப் புறப்பட்டு வந்து, அங்கே இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ் ஆகியோருடன் தங்கியிருந்தார்.

👉 இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்து, இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து சினிமா நுணுக்கங்களை கற்றார்.

👉 1978ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான 16 வயதினிலே, மாபெரும் வெற்றியை தந்தது. அதை தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், கருத்தம்மா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். 

👉 இவர் பத்மஶ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

👉 தமிழ் திரைப்படத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய பாசத்துக்குரிய பாரதிராஜா இன்று 76வது வயதை நிறைவு செய்கிறார்.


ஜார்ஜஸ் லிமேட்டர்


👉 பிரபஞ்ச விரிவாக்க கோட்பாட்டை முதன்முதலில் வெளியிட்ட ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் லிமேட்டர் (Georges Henri Joseph Edouard Lemaitre) 1894ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின் சாலர்வ் நகரில் பிறந்தார்.

👉 இவர் பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற ஹபிள் விதியை (Hubbles law) எட்வின் ஹப்பிள் கூறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே 1927-ல் இவர் வெளியிட்டார்.

👉 காஸ்மிக் எக் என இவர் கண்டறிந்த கோட்பாடுதான் பின்னாளில், பெரு வெடிப்புக் கோட்பாடு என்ற பெயரில் பிரபலம் அடைந்தது. பிரபஞ்ச விரிவாக்கம் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து, விரிவான கட்டுரைகளை 1933-ல் வெளியிட்டார்.

👉 பிரபஞ்சவியல் கணக்கீடுகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்த ஜார்ஜஸ் லிமேட்டர் 72வது வயதில் (1966) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


180 – வடக்கு ஆப்பிரிக்காவில் சில்லியம் நகரில் (இன்றைய தூனிசியாவில்) கிறித்தவர்களாக இருந்தமைக்காக 12 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1048 – இரண்டாம் தமாசசு திருத்தந்தையாகத் தேர்த்ந்டுக்கப்பட்டார்.

1203 – நான்காம் சிலுவைப் படையினர் கான்ஸ்டண்டினோபில் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சியசு ஆஞ்செலசு தலைநகரை விட்டுத் தப்பியோடினார்.

1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1453 – நூறாண்டுப் போரின் இறுதிச் சமர் இடம்பெற்றது. பிரெஞ்சுப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். சுரூசுபரியின் முதலாம் கோமகன் சமரில் கொல்லப்பட்டார்.

1755 – கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.

1762 – உருசியப் பேரரசர் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மனைவி இரண்டாம் கேத்தரீன் முடிசூடினார்.

1771 – இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணம் செய்த கனடாவின் சிப்பேவியப் பழங்குடிகளின் தலைவன் இனுவிட்டு மக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.

1791 – பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1794 – பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி முடிவடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் 16 கார்மேலியப் புனிதர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.

1902 – வில்லிசு கேரியர் முதலாவது குளிரூட்டியை நியூயோர்க்கில் உருவாக்கினார்.

1911 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.[1]

1917 – பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் மட்டுமே வின்சர்ரென்ற பெயரைப் பெறுவார்கள் என்ற ஆணையை ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பிறப்பித்தார்.

1918 – போல்செவிக்குகளின் உத்தரவின் பேரில் உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் எக்கத்தரீன்பூர்க் நகரில் கொல்லப்பட்டனர்.

1918 – டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் செருமானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1932 – நாட்சிக் குழுக்களுக்கும், எசுஎசு, எஸ்ஏ, மற்றும் செருமானியக் கம்யூனிசக் கட்சி உறுப்பினரக்ளுக்கும் இடையே கலவரம் மூண்டது.

1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் உயிரிழந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாரி எஸ். ட்ரூமன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க செருமனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.

1953 – அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 44 பேர் உயிரிழந்தனர்.

1955 – வால்ட் டிஸ்னி கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.

1967 – நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் "சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது.

1968 – ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அரசுத்தலைவர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது அசன் அல்-பாக்கர் தலைவரானார்.

1973 – ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.

1975 – அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுசு விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

1976 – கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாயின. இனவொதுக்கல் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.

1976 – கிழக்குத் திமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டு, அதன் 27வது மாகாணமானது.

1979 – நிக்கராகுவா அரசுத்தலைவர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.

1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.[2]

1981 – அமெரிக்காவில் கேன்சசு நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் உயிரிழந்தனர்.

1984 – ஐக்கிய அமெரிக்காவில் மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயது 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.

1989 – திரு ஆட்சிப்பீடத்திற்கும் போலந்துக்கும் இடையே உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.

1994 – பிரேசில் இத்தாலியை வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தைப் பெற்றது.

1996 – நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.

1998 – பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர்.

1998 – பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.

2000 – பாட்னாவில் அலாயன்சு ஏர் வானூர்தி 7412 செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அண்மித்தபோது, குடியிருப்புப் பகுதியில் மோதியதில் 60 பேர் உயிரிழந்தனர்.[3]

2001 – சூலை 2000 விபத்தின் பின்னர் கான்கோர்டு மீண்டும் சேவையில் விடப்பட்டது.

2006 – இந்தோனேசியா, ஜாவாவில் 7.7 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 668 பேர் உயிரிழந்தனர்.

2006 – இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் உயிரிழந்தனர்.

2014 – ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன்-உருசிய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.

2015 – ஈராக், தியாலாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய பிறப்புகள்


1827 – பிரெடெரிக் ஏபெல், பிரித்தானிய வேதியியலாளர் (இ.1902)

1881 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (இ. 1942)

1894 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய மதகுரு, வானியலாளர் (இ. 1966)

1898 – பெரினிசு ஆபாட், அமெரிக்கப் படப்பிடிப்பாளர் (இ. 1991)

1899 – ஜேம்ஸ் காக்னி, அமெரிக்க நடிகர் (இ. 1986)

1941 – பாரதிராஜா, தமிழகத் திரைப்பட இயக்குனர்

1954 – அங்கெலா மேர்க்கெல், செருமனியின் 8வது அரசுத்தலைவர்

1957 – வெண்டி இலவுரல் பிரீடுமன், கனடிய-அமெரிக்க வானியலாளர்

1969 – கேரி கிரே, அமெரிக்க நடிகர்

1979 – மைக் வோகெல், அமெரிக்க நடிகர்

இன்றைய இறப்புகள்


1588 – சினான், உதுமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1489)

1762 – உருசியாவின் மூன்றாம் பீட்டர் (பி. 1728)

1790 – ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1723) 1918 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (பி. 1868), மற்றும் அவரது குடும்பம்:

அலெக்சாந்திரா பியோதரொவ்னா, அரசி (பி. 1872)

ஒல்கா, இளவரசி (பி. 1895)

தத்தியானா, இளவரசி (பி. 1897)

மரீயா, இளவரசி (பி. 1899)

அனஸ்தாசியா, இளவரசர் (பி. 1901)

அலெக்சி, இளவரசர் (பி. 1904)

1919 – டி. எம். நாயர், இந்திய அரசியல்வாதி (பி. 1868)

1972 – ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, யாழ்ப்பாண ரோமன்-கத்தோலிக்க ஆயர் (பி. 1901)

1997 – இரா. கிருஷ்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1909)

2001 – கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)

2012 – மிருணாள் கோரே, இந்திய அரசியல்வாதி (பி. 1928)

2014 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை, (பி. 1976)

2015 – இழூல்சு பியான்கி, பிரெஞ்சு வாகன ஓட்ட வீரர் (பி. 1989)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (சிலோவாக்கியா)

சர்வதேச நீதிக்கான உலக நாள் (ஐநா)