முக்கிய நிகழ்வுகள் :-


🌐 2003ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி மொசில்லா பயர் பாக்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

🏆 1955ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

🏁 1857ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி சிப்பாய் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.


பிறந்த நாள் :-


காமராஜர்

📖 கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📖 தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார்.

📖 1936ல் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1940ல் விருதுநகர் நகராட்சித் தலைவர், 1946-52 வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

📖 இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் 'கருப்பு காந்தி' என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

📖 இவரது ஆட்சியின் போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் தலைவர் என்றும், ஈ.வே.ரா.,பச்சைத் தமிழன் என்றும் பாராட்டியுள்ளார்.

📖 பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர், தனது 72வது வயதில் (1975) மறைந்தார். மறைவுக்குபின் 1976ல், இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


மறைமலை அடிகள்


✍ தனித்தமிழ் இயக்கம் ஆரம்பித்து, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடியில் பிறந்தார். 

✍ தமிழ் பற்றால், வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டார். இவர் சிறுவயதில் இருந்தே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

✍ மேலும் இவர் முருகவேள் என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911-ல் துறவு மேற்கொண்டார்.

✍ மூடத்தனமான செயல்களை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகள் 74வது வயதில் (1950) மறைந்தார்.


துர்காபாய் தேஷ்முக்


🏁 சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காபாய் தேஷ்முக் 1909ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் பிறந்தார்.

🏁 இவர் காந்திஜிக்கு மிகவும் பிரியமான தொண்டர். 1923-ல் பெண்களுக்கான பள்ளியை தொடங்கி, அவர்களுக்கு தொழில் பயிற்சிகள் அளித்தார். அதை பாராட்டி காந்திஜி தங்கப்பதக்கம் தந்தார்.

🏁 பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ, பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். சமூக சேவைகளின் அன்னை என்று இந்திரா காந்தி புகழாரம் சூட்டினார்.

🏁 நாட்டில் முதன்முதலில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்த இரும்புப் பெண்மணி துர்காபாய் தேஷ்முக் 72வது வயதில் (1981) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


70 – உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர்.

1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர்.

1149 – திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது.

1240 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை “நேவா” என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.

1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

1741 – உருசியக் கப்பல் கலபதி அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.

1799 – நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார்.

1815 – நெப்போலியப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் பெலரபோன் என்ற கப்பலில் வைத்து சரணடைந்தான்.

1816 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகத்தீன் பிரெனெல் ஒளியின் விளிம்பு விளைவுக்கான பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற பிரெனெல் வலயங்கள் பற்றி அறிமுகப்படுத்தினார்.

1823 – உரோமை நகரில் பண்டைய சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் தீயில் சேதமடைந்தது.

1834 – எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை மன்று 356 ஆண்டுகளின் பின்னர் கலைக்கப்பட்டது.

1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.

1860 – இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.[1]

1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1870 – ரூபர்ட்சுலாந்தும் வட-மேற்கு பிராந்தியமும் கனடாவுக்குக் கொடுக்கப்பட்டன. இப்பெரும் நிலப்பகுதிகளில் இருந்து மானிட்டோபா, வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய கனடிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1888 – சப்பானின் பண்டாய் சுழல்வடிவ எரிமலை வெடித்ததில் 500 பேர் உயிரிழந்தனர்.

1916 – வாசிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் இணைந்து போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

1927 – வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் ஆத்திரியக் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1946 – ஐக்கிய இராச்சியம் வடக்கு போர்னியோவை (இன்றைய மலேசியாவின் சபாவில்) தனதாக்கியது.

1955 – அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர்.

1959 – ஐக்கிய அமெரிக்காவில் எஃகுத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது. இது அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு எஃகு இறக்குமதிக்கு வழிவகுத்தது.

1974 – சைப்பிரசு, நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் இராணுவப் புரட்சியை ஆரம்பித்து அரசுத்தலைவர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோசு சாம்ப்சனைத் தலைவராக்கினார்கள்.

1975 – விண்வெளிப் போட்டி: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் அப்பல்லோ-சோயூசு விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.

1983 – பாரிசில் ஓர்லி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.

1991 – இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

1998 – இலங்கை, வவுனியாவில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சண்முகநாதன் கொல்லப்பட்டார்.[2]

2002 – அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல்லைப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த அகமது சேக் கிற்கு பாக்கித்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

2003 – டைம் வார்னெர் நெட்சுகேப் நிறுவனத்தைக் கலைத்தார். இதே நாளில் மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

2006 – டுவிட்டர் சமூக வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.

2014 – மாஸ்கோவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 24 பேர் உயிரிழந்தனர், 160 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1606 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669)

1858 – எம்மலின் பான்கர்ஸ்ட், ஆங்கிலேய செயற்பாட்டாளர் (இ. 1928)

1873 – ஹென்றி புய்சன், பிரெஞ்சு வளிமண்டல ஆய்வாளர் (இ. 1944)

1876 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)

1903 – காமராசர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1975)

1915 – ஆல்பர்ட் கியோர்சோ, அமெரிக்க அறிவியலாளர் (இ.2010)

1918 – பிரெண்டா மில்னெர், ஆங்கிலேய-கனடிய உளவியலாளர்

1922 – பி. ராஜம் ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2009)

1922 – என். சங்கரய்யா, தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி

1930 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 2004)

1933 – எம். டி. வாசுதேவன் நாயர், இந்திய எழுத்தாளர்

1935 – திலகன், இந்திய நடிகர் (இ. 2012)

1937 – கானாயி குஞ்ஞிராமன், கேரள சிற்பி

1943 – ஜோசெலின் பெல் பர்னல், வடக்கு அயர்லாந்து வானியற்பியலாளர், வானியலாளர்

1946 – ஹஸனல் போல்கியா, புருணை சுல்தான்

1947 – லிடியா டேவிசு, அமெரிக்க எழுத்தாளர்

1949 – முகமது பின் ராஷித் அல் மக்தூம், ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சர்

1953 – முத்தையா முதலியார், இந்திய அரசியல்வாதி (பி. 1883)

1956 – ஜோ சத்ரியானி, அமெரிக்க பாடகர்

1959 – ரமேசு போக்கிரியால், இந்திய அரசியல்வாதி, இந்தி மொழிப்புலவர்

1961 – பொரஸ்ட் விடேகர், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1965 – பெ. கருணாகரன், தமிழக எழுத்தாளர்

1970 – அனு ஹாசன், தமிழ்த் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர்

1973 – பிறையன் ஆஸ்டின் கீரின், அமெரிக்க நடிகர்

1976 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (இ. 2014)

இன்றைய தின இறப்புகள்


998 – அபுல் வபா, பாரசீக கணிதவியலாளர்,. வானியலாளர் (பி. 940)

1274 – பொனெவெந்தூர், இத்தாலிய ஆயர், புனிதர் (பி. 1221)

1868 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன், அமெரிக்க மருத்துவர் (பி. 1819)

1904 – ஆன்டன் செக்கோவ், உருசிய எழுத்தாளர் (பி. 1860)

1907 – சியூ சின், சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (பி. 1875)

1919 – எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1852)

1953 – முத்தையா முதலியார், தமிழக அரசியல்வாதி (பி. 1883)

1976 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (இ. 2014)

1991 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)

2002 – எம். எச். எம். ஷம்ஸ், இலங்கையின் ஊடகவியலாளர் (பி. 1940)

2003 – என். கே. பத்மநாதன், ஈழத்தின் நாதசுவரக் கலைஞர் (பி. 1931)

2013 – எம். கே. ஆத்மநாதன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர்

2016 – கந்தீல் பலோச்சு, பாக்கித்தானிய நடிகை, பெண்ணிய செயற்பாட்டாளர் (பி. 1990)

2020 – பத்மா சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1934)

இன்றைய தின சிறப்பு


நாள் முதியோர் நாள் (கிரிபட்டி)

கல்வி வளர்ச்சி நாள் (தமிழ்நாடு)