🎼 1995ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி எம்பி3 (டிஜிட்டல் ஆடியோக்கான ஆடியோ குறியீடு) பெயரிடப்பட்டது.


🚀 1967ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

👉 19-ம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதி கோபால் கணேஷ் அகர்கர் 1856 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சாதாரா மாவட்டத்தின் கராட் தாலுக்காவில் டேம்பூ என்ற கிராமத்தில் பிறந்தார்.

🔶 1914 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்னி பெசன்ட் அம்மையார் நியூ இந்தியா என்ற பத்திரிகையை தொடங்கினார்.

🌹 2004ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்தியத் துறவி சுவாமி கல்யாண் தேவ் மறைந்தார்.


நினைவு நாள் :-


எம்.எஸ்.விஸ்வநாதன்

🎼 பழம்பெரும் இசையமைப்பாளரான திரை இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.

🎼 1953ல் வெளிவந்த ஜெனோவா படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்துள்ளார்.

🎼 கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.

🎼 லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை தொட்ட மெல்லிசை மன்னர் தனது 87வது வயதில் 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


வா.செ.குழந்தைசாமி


🌊 இந்திய பொறியாளர் வா.செ.குழந்தைசாமி 1929ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் பிறந்தார்.

🌊 நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத்துறை திட்டக்குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

🌊 தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் இருந்தவர்.

🌊 சர்வதேச தொலைநிலைக் கல்வி குழுவின் ஆசிய துணைத் தலைவராக, காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுத்தலைவராக பணியாற்றியுள்ளார். 

🌊 நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர்.

🌊 தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்றவர்.

🌊 பன்முக ஆளுமை திறன் கொண்ட வா.செ.குழந்தைசாமி தனது 87வது வயதில் (2016) மறைந்தார்.


இன்றைய முக்கிய நிகழ்வுகள்


1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.

1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லி பர்மிங்காமில் இருந்து வெளியேறினார்.

1798 – அமெரிக்க அரசைப் பற்றி அவதூறாகவோ, பொய்யாகவோ எழுதுவது, பிரசுரிப்பது குற்றமாக ஐக்கிய அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது.

1814 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டது.[1]

1874 – சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன.

1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.

1900 – சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி தியென்சினைக் கைப்பற்றியது.

1933 – செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

1938 – அவார்ட் இயூசு உலகைச் சுற்றி 91-மணி நேரத்தில் விமானத்தில் பறந்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.[2]

1948 – இத்தாலியின் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி நாடாளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.

1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.

1965 – மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.

1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

1969 – ஒந்துராசு காற்பந்து அணி எல் சால்வடோர் அணியிடம் தோற்றதை அடுத்து, ஒந்துராசில் சல்வதோர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது.

1976 – கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.

1995 – எம்பி3 பெயரிடப்பட்டது.

1995 – இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.

2015 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக முதல் தடவையாக சென்றது.

2016 – பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1854 – மகேந்திரநாத் குப்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1932)

1862 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (இ. 1918)

1913 – ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அரசுத்தலைவர் (இ. 2006)

1918 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடியத் திரைப்பட இயக்குநர் (இ. 2007)

1920 – எசு. பி. சவாண், இந்திய அரசியல்வாதி (இ. 2014)

1925 – க. பசுபதி, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (இ. 1965)

1929 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியலாளர் (இ. 2016)

1935 – ஐ-இச்சி நெகிழ்சி, சப்பானிய வேதியியலாளர்

1938 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)

1942 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (இ. 2006)

1943 – ரோகண விஜயவீர, இலங்கைப் புரட்சியாளர் (இ. 1989)

1947 – நவின்சந்திரா ராம்கூலம், மொரிசியசின் 3வது பிரதமர்

1954 – சரத்குமார், தமிழகத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி

1967 – ஹசான் திலகரத்ன, இலங்கைத் துடுப்பாளர்

1968 – மைக்கேல் பால்மர், சிங்கப்பூர் அரசியவாதி

1969 – அஸ்வினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2012)

1973 – கனகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1987 – சாரா கேனிங், கனடிய நடிகை

இன்றைய இறப்புகள்


1827 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)

1951 – நவும் இதெல்சன், சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1885)

1963 – சுவாமி சிவானந்தர், இந்து சமய அத்வைத வேதாந்த குரு (பி. 1887)

2004 – சுவாமி கல்யாண் தேவ், இந்தியத் துறவி (பி. 1876)

2008 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)

2015 – எம். எஸ். விஸ்வநாதன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1928)

2017 – மரியாம் மீர்சாக்கானி, ஈரானியக் கணிதவியலாளர் (பி. 1977)

இன்றைய சிறப்பு நாள் 


பாஸ்டில் நாள் (பிரான்சு)

குடியரசு நாள் (ஈராக்)