👉 1854ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஒளிப்படச் சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்தார்.


பிறந்த நாள் :-


சுந்தர் பிச்சை


👉 தமிழரின் திறமையை உலகிற்கு வெளிக்காட்டிய கூகுளின் CEO சுந்தர் பிச்சை அவர்கள் 1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

👉 இவர் 2004-ல் கூகுளில் இணைந்தார். பிறகு கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராகவும், Chrome and apps-ல் மூத்த துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

👉 2009-ஆம் ஆண்டு கூகுளின் Gmail and Google Maps போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். 2013-ல் சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

👉 மேலும், கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில் (Product Chief) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

👉 விடாமுயற்சியோடு போராடி வெற்றிப்பெற்ற தமிழன் என்ற பெருமைக்குரிய இவர் தனது 47வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


மலாலா யூசஃப்சாய்

👉 பெண் கல்வி உரிமைக்காக போராடிய உலக அடையாளச் சின்னம், மலாலா யூசஃப்சாய் 1997ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பிறந்தார். 

👉 மலாலா, 2013ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையை தொடர்பு கொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வையே ஐக்கிய நாடுகள் மலாலா தினமாக அறிவித்தது.

👉 பாகிஸ்தானில் சில பகுதிகளில் பெண்கள் படிக்கக்கூடாது, தெருக்களில் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து இவர் போராடினார்.

👉 இவர் பொது இடங்களிலும், பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினார். எனவே, இவரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு ஆபத்தான நிலையிலிருந்து அவர் உயிர் பெற்றார். 

👉 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பாகிஸ்தானியப் பெண் மற்றும் மிக இளையவள் என்ற பெருமையை கொண்ட மலாலா தனது 22வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


நிகழ்வுகள்

70 – ஆறு மாத முற்றுகையின் பின்னர் டைட்டசின் படையினர் எருசலேமின் சுவர்களைத் தாக்கினர். மூன்று நாட்களின் பின்னர் சுவர்களைத் தகர்த்ததை அடுத்து, இரண்டாம் கோவிலை அவர்களால் அழிக்க முடிந்தது.

1191 – மூன்றாவது சிலுவைப் போர்: சலாகுத்தீனின் படையினர் பிரான்சின் இரண்டாம் பிலிப்பிடம் சரணடைந்தனர். பாலத்தீனத்தின் அக்கோ நகர் மீதான 2 ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது.

1543 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கேத்தரீன் பார் என்ற தனது 6-வதும், கடைசியுமான மனைவியைத் திருமணம் புரிந்தார்.

1561 – மாஸ்கோவின் புனித பசில் பேராலயம் திருமுழுக்குப் பெற்றது.

1562 – கத்தோலிக்க ஆயர் தியேகோ டெ லாண்டா மாயாக்களின் பழம்பெரும் நூல்களைத் தீக்கிரையாக்கினார்.

1576 – ராஜ்மகால் போரில் வங்காள சுல்தானகத்தை வென்றதை அடுத்து, முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கைப்பற்றி இணைத்தது.[1]

1641 – போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1691 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் இராணுவம் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.

1776 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தார்.

1799 – ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் (சீக்கியப் பேரரசு) ஆட்சியைப் பிடித்தார்.

1806 – 16 செருமானிய மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவின.

1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1913 – செர்பியப் படையினர் பல்கேரியாவின் விதின் நகரை முற்றுகையிட்டனர்.

1918 – சப்பானின் "கவாச்சி" என்ற போர்க்கப்பல் ஒன்சூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் உயிரிந்தனர்..

1920 – சோவியத்-லித்துவேனிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. லித்துவேனியாவை சோவியத் ஒன்றியம் தனிநாடாக அங்கீகரித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய, சோவியத் படைகள் புரொகோரொவ்கா என்ற இடத்தில் பெரும் சண்டையில் ஈடுபட்டன.

1948 – இசுரேலியப் பிரதமர் டேவிட் பென்-குரியன் லோட், இரம்லா நகர்களில் இருந்து பாலத்தீனியர்களை வெளியேற உத்தரவிட்டார்.

1961 – கடக்வாசுலா, பான்செத் அணைகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாக புனேயில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தில் மூழ்கி 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1967 – அமெரிக்காவின் நுவார்க் நகரில் பெரும் இனக்கலவரம் வெடித்தது. 26 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.

1971 – ஆத்திரேலியாவில் பழங்குடியினரின் கொடி முதன் முறையாகப் பறக்கவிடப்பட்டது.

1975 – சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1993 – சப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் உயிரிழந்தனர்.

2006 – இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லெபனான்-இசுரேலியப் போர் ஆரம்பமானது. போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.

2007 – அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி உலங்குவானூர்திகள் பகுதாது மீது வான் தாக்குதலை நடத்தின.

2007 – வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

2012 – சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவில் துராய்மீசா கிராமத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் 150 பேர் வரை கொல்லப்பட்டனர்.[2]

2012 – நைஜீரியாவில் ஒக்கோபி நகரில் எண்ணெய் சுமையுந்து ஒன்று வெடித்ததில் 100 பேர் வரை உயிரிழந்தனர்.

பிறப்புகள்

கிமு 100 – யூலியசு சீசர், உரோமை அரசியல்வாதி, இராணுவத் தளபதி (இ. கிமு 44)[3]

1730 – சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (இ. 1795)

1813 – கிளவுட் பெர்னாட், பிரெஞ்சு உடலியங்கியலாளர் (இ. 1878)

1817 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1862)

1854 – ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனர் (இ. 1933)

1895 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1983)

1904 – பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலிய எழுத்தாளர் (இ. 1973)

1909 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர் (இ. 1961)

1924 – பிரின்ஸ் குணசேகரா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி

1928 – மு. அனந்தகிருஷ்ணன், தமிழ் இணையக் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர்

1935 – சத்தோசி ஓமுரா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்

1938 – ஜெய்சங்கர், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2000)

1952 – எசாம் சரஃப், எகிப்திய அரசியல்வாதி

1960 – ஏர்ல் குணசேகர, இலங்கை அரசியல்வாதி

1961 – சிவ ராஜ்குமார், இந்திய நடிகர், பாடகர்

1965 – சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் துடுப்பாளர்

1975 – நா. முத்துக்குமார், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 2016)

1975 – பில் லோர்ட், அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்

1978 – மிச்செல் ரோட்ரிக்வெஸ், அமெரிக்க நடிகை

1984 – சாமி சைன், கனடிய மற்போர் வீரர்

1991 – ஜேம்சு ரொட்ரீகசு, கொலம்பிய கால்பந்து வீரர்

1997 – மலாலா யூசப்சையி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய செயற்பாட்டாளர்

இறப்புகள்

1536 – எராசுமசு, இடச்சு மதகுரு, வானியலாளர் (பி. 1466)

1682 – ழீன் பிக்கார்டு, பிரான்சிய மதகுரு, வானியலாளர் (பி. 1620)

1804 – அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1755)

2006 – உமர் தம்பி, தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. 1953)

2012 – தாரா சிங், இந்திய மற்போர் வீரர், நடிகர் (பி. 1928)

2012 – மா. ஆண்டோ பீட்டர், தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (பி. 1967)

2012 – மணி கிருஷ்ணசுவாமி, தமிழக கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1930)

2013 – பிரான், இந்திய நடிகர் (பி. 1920)

2013 – அமர் கோ. போசு, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1929)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (கிரிபட்டி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979).

விடுதலை நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பிம் போர்த்துகலிடம் இருந்து 1975).