வீட்டு வாங்குவதற்கான ஜாதக அமைப்பு நான்காம் வீட்டை பொறுத்தது அதாவது ஜாதகத்தில் நான்காம் வீடு எட்டாம் வீடுபார்க்க வேண்டும் 

அவ்வாறு பார்க்கும் போது நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந்திருந்தால் சொந்த வீடு அல்லது பரம்பரை சொத்து வாங்குவது நிச்சயம்.

அதே நான்காம் வீட்டில் ராகு அமைந்திருந்தால் வீடு வாங்குவது என்பது சற்றே கடினமானது.

அதேப் போல் நான்காம் வீட்டில் கேது அமைந்திருந்தால் ஒரு சொந்த இடத்தை வாங்கலாம் அல்லது இருக்கும் சொந்தமான இடங்களை விற்காமல் காப்பாற்றிக் கொள்ளலாம்.

இதுவே நான்காம் வீட்டில் சூரியன் அல்லது சனி அமைந்திருந்தால் வீடு வாங்குவதற்கு யோகம் குறைவு தான் அவர்கள் எப்போதும் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.