ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் வளர்மதி வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு, முன்வைப்பு தொகையாக ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்யவும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைப்ப தற்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களை, வருகிற 21-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவ லகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.