குறள் : 1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
மு.வ உரை :
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்ளூ பக்கத்தே சிறிது அகன்றேன்ளூ அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!
கலைஞர் உரை :
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
சாலமன் பாப்பையா உரை :
முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.
Kural 1187
Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil
Allikkol Vatre Pasappu
Explanation :
I who was in close embrace just turned aside and the moment I did so sallowness came on me like something to be seized on.
Horoscope Today: Astrological prediction for July 30, 2023
இன்றைய ராசிப்பலன் - 30.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
30-07-2023, ஆடி 14, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பகல் 10.35 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. மூலம் நட்சத்திரம் இரவு 09.32 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 09.32 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன்- 30.07.2023 | Today rasi palan - 30.07.2023
மேஷம்
இன்று உங்களுக்கு நிம்மதியின்மையும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சிறு தடங்கலுக்கு பின் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மிதுனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
கடகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
சிம்மம்
இன்று உடல் நிலையில் சற்று மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
கன்னி
இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.
துலாம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி தரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் சற்று பலவீனமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிறமொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். சுப செலவுகள் உண்டாகும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.
மீனம்
இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.