குறள் : 1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
மு.வ உரை :
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்ளூ பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?
கலைஞர் உரை :
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
சாலமன் பாப்பையா உரை :
என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?
Kural 1181
Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven
Panpiyaarkku Uraikko Pira
Explanation :
who (then) consented to the absence of my loving lord to whom can I (now) relate the fact of my having turned sallow.
Horoscope Today: Astrological prediction for July 24, 2023
இன்றைய ராசிப்பலன் - 24.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
24-07-2023, ஆடி 08, திங்கட்கிழமை, சஷ்டி திதி பகல் 01.43 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 10.12 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் இரவு 10.12 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 24.07.2023 | Today rasi palan - 24.07.2023
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். அசையா சொத்துக்கள் வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
துலாம்
இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
விருச்சிகம்
இன்று தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை. வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகங்களில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மீனம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சிலருக்கு நவீனகரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.