குறள் : 1180

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து.


மு.வ உரை :

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

கலைஞர் உரை :

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

சாலமன் பாப்பையா உரை :

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.


Kural 1180

Maraiperal Ooraarkku Aridhandraal Empol

Araiparai Kannaar Akaththu

Explanation :

It is not dificult for the people of this place to understand the secret of those whose eyes like mine are as it were beaten drums.


Horoscope Today: Astrological prediction for July 23, 2023


இன்றைய ராசிப்பலன் - 23.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

23-07-2023, ஆடி 07, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.45 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திரம் நட்சத்திரம் இரவு 07.47 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் இரவு 07.47 வரை பின்பு சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 23.07.2023 | Today rasi palan - 23.07.2023

மேஷம்

இன்று உங்களுக்கு ஆச்சிரியப்படுத்தகூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியோர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பொருளாதார ரீதியான நெருக்கடிகளால் மனஉளைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கடகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் எதிர்பாராத வகையில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் செய்ய நேரிடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வீண் பேச்சால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை அளிக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வகையில் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். 

மகரம்

இன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கிருந்த பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026