குறள் : 1172

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்பது எவன்?


மு.வ உரை :

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள் இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?


கலைஞர் உரை :

விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?


சாலமன் பாப்பையா உரை :

வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?


Kural 1172

Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap

Paidhal Uzhappadhu Evan?


Explanation :

The dyed eyes that (then) looked without foresight why should they now endure sorrow without feeling sharply (their own fault).


Horoscope Today: Astrological prediction for July 15, 2023


இன்றைய ராசிப்பலன் - 15.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


15-07-2023, ஆனி 30, சனிக்கிழமை, திரியோதசி திதி இரவு 08.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.23 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். மாத சிவராத்திரி, சனிப் பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 15.07.2023 | Today rasi palan - 15.07.2023

மேஷம்

இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும். பிள்ளைகள் வகையில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் மதியத்திற்கு பிறகு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.22 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.

தனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் அனுகூலம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் கிட்டும். உத்தியோக ரீதியாக உள்ள பிரச்சினைகள் குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026