குறள் : 1168

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை.


மு.வ உரை :

இந்த இராக்காலம் இரங்கத்தக்கதுளூ எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.


கலைஞர் உரை :

இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.


சாலமன் பாப்பையா உரை :

பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!


Kural 1168

Mannuyir Ellaam Thuyitri Aliththiraa

Ennalladhu Illai Thunai


Explanation :

The night which graciously lulls to sleep all living creatures has me alone for her companion.



Horoscope Today: Astrological prediction for July 11, 2023


இன்றைய ராசிப்பலன் - 11.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


11-07-2023, ஆனி 26, செவ்வாய்க்கிழமை, நவமி திதி மாலை 06.05 வரை பின்பு தேய்பிறை தசமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 07.04 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 11.07.2023 | Today rasi palan - 11.07.2023

மேஷம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் ஓரளவு சாதகமான பலன் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் நிலை உருவாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். மனஉறுதியோடு எதையும் எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வெளி இடங்களில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் நற்செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும். 

கும்பம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும்.

மீனம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பண நெருக்கடி குறைந்து மனநிம்மதி உண்டாகும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026