குறள் : 1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது.


மு.வ உரை :

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றதுளூ அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

கலைஞர் உரை :

காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது

சாலமன் பாப்பையா உரை :

காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.


Kural 1166

Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal

Thunpam Adhanir Peridhu

Explanation :

The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.


Horoscope Today: Astrological prediction for July 09, 2023


இன்றைய ராசிப்பலன் - 09.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

09-07-2023, ஆனி 24, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 08.00 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 07.29 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 


இன்றைய ராசிப்பலன் - 09.07.2023 | Today rasi palan - 09.07.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனக்குழப்பம் சற்று குறையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். திடீரென்று பயணம் செல்ல நேரிடும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளை தவிர்க்கவும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். பழைய கடன் பிரச்சினை தீரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பணவரவு உண்டாகும்.

விருச்சிகம்

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனகுழப்பம் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. எதையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மகரம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026