குறள் : 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
மு.வ உரை :
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு (பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும் விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
கலைஞர் உரை :
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?
சாலமன் பாப்பையா உரை :
சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.
Kural 1160
Aridhaatri Allalnoi Neekkip Pirivaatrip
Pinirundhu Vaazhvaar Palar
Explanation :
As if there were many indeed that can consent to the impossible kill their pain endure separation and yet continue to live afterwards.
Horoscope Today: Astrological prediction for July 03, 2023
இன்றைய ராசிப்பலன் - 03.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
03-07-2023, ஆனி 18, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி மாலை 05.08 வரை பின்பு தேய்பிறை பிரதமை. மூலம் நட்சத்திரம் பகல் 11.01 வரை பின்பு பூராடம். சித்தயோகம் பகல் 11.01 வரை பின்பு மரணயோகம். குருபூர்ணிமா.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 03.07.2023 | Today rasi palan - 03.07.2023
மேஷம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
ரிஷபம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். செய்யும் செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது.
மிதுனம்
இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீக காரியங்கள் செய்வதில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வியாபார ரீதியான பயணங்களினால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு திடீர் தன வரவு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் பைசலாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். ஆரோக்கிய பிரச்சினை தீரும்.