ராணிப்பேட்டை மாவட்டம், வி.சி.மோட்டூரைச் சேர்ந்தவர் தேவராஜ், 40; லாரி மெக்கானிக். இவரது மனைவி பானுமதி, 34.

இவர்களுக்கு திருமணமாகி, 15 ஆண்டுகளாகிறது. மகன், மகள் உள்ளனர். தேவராஜ் தினமும் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனால், அவருடன் கோபித்த பானுமதி, வாலாஜா அடுத்த சின்னதகரகுப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இரண்டு ஆண்டுகளாக அங்கு வசிக்கிறார்.

நேற்று முன்தினம் மாலை அங்கு சென்ற தேவராஜ், குடிபோதையில் பானுமதியுடன் தகராறில் ஈடுபட்டு, தாக்க முயன்றார்.

ஆத்திரமடைந்த பானுமதி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கியதில் தேவராஜ் பலியானார். வாலாஜா போலீசார், பானுமதியை கைது செய்தனர்.