ஆடி செவ்வாய் அன்று அம்பிகையை வழிபட்டு வாழ்வில் வெற்றி பெறலாம்!
ஆடி மாதம் என்றாலே அது அம்பிகைக்கு உகந்த மாதம் தான். ஆடி மாதத்தில் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் பூஜைகளும் பல மடங்கு பலனை தரும். இந்த மாதத்தில் நாம் வேண்டும் வேண்டுதலும் சீக்கிரத்தில் நிறைவேறும். இதற்கு காரணம் அம்பிகையே ஆடி மாதத்தில் தான் தவமிருந்து தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டார். அம்பிகையே இந்த மாதத்தை தேர்ந்தெடுத்து தன்னுடைய வேண்டுதலை வைத்து அது நிறைவேற்றியதால் இந்த மாதத்தில் நம்முடைய வேண்டுதல் எதுவாக இருப்பதும் அதுவும் விரைவில் நிறைவேறும்.
இத்தகைய சிறப்புமிக்க இந்த மாதத்தில் நம்முடைய குடும்பத்தில் உள்ள வறுமை பிணி, பீடை அனைத்தும் நீங்கி தீராத கடன் சுமை கூட விலக அம்பிகையை செவ்வாய்க்கிழமையில் வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமையில் வழிபடுவதற்கான காரணம் கடன் நீங்க இந்த நாளை போல உகந்த நாள் ஏதுமில்லை. ஆகையால் ஆடி மாதத்தில் இந்த நாளில் நாம் அம்பிகையை வழிபடுவது மேலும் பல நலன்களை தரும்.
கடன் தீர ஆடி மாத வழிபாடு இந்த வழிபாட்டிற்கு உங்கள் வீட்டில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் ஆலயத்தில் சர்க்கரை பொங்கல் செய்து நெய்வேத்தியமாக படைத்து அம்மனை வழிபட வேண்டும். இதை எப்படி செய்ய வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை அன்று முடிந்தால் காலையிலே அம்மனுக்கு அபிஷேகங்கள் நடக்கும் பொழுது நாம் பால் வாங்கிக் கொடுத்து பாலாபிஷேகம் செய்ய சொல்லலாம். அந்த நேரத்தில் பாலபிகேஷத்தில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பு. அதன் பிறகு அம்மன் ஆலயத்தில் நாம் சுவையாக சர்க்கரை பொங்கலை வைத்து அம்மனுக்கு படைத்து ஆலயத்திற்கு வருவோருக்கு அதை பிரசாதமாக கொடுத்து வணங்க வேண்டும்.
ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள் இதே போல சர்க்கரை பொங்கலை வீட்டில் வைத்து வணங்கிய பிறகு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஆலயத்திற்கு சென்று பிரசாதத்தை கொடுக்கலாம். அதற்கும் வாய்ப்பில்லை என்பவர்கள் உங்கள் வீட்டில் படைக்கும் பிரசாதத்தை வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம். இதன் மூலம் உங்கள் கடன்கள் அடைந்து வறுமை நீங்கி குடும்பம் செல்வ செழிப்புடன் வாழ அம்பிகையின் அருளை முழுவதுமாக பெறலாம்.
நம்முடைய பாரம்பரியம் முதலே பொங்கல் வைத்து வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது அதிலும் இந்த மாதத்தில் அம்பிகைக்கு பொங்கல் வைத்து வழிபடுவது குடும்ப மேலும் சுபிட்சமாக மாற அவர்களின் அருளை பெற வழிவகுக்கும். கடன் அடைய வேண்டும் என்ற வேண்டுதலை வைப்பவர்கள் மட்டும் செவ்வாய்க்கிழமையில் எந்த வழிபாடு செய்யலாம். செவ்வாய்க்கிழமையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு தினங்களிலும் கூட வைக்கலாம் தவறில்லை.
இத்தனை நலன்களை தரக்கூடிய இந்த ஆடி மாத வழிபாட்டை நாமும் செய்து நம் குடும்பம் கடன் பிணிப் பீடை வறுமை இல்லாமல் சுபிட்சமாக வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
அம்பிகையே எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள். எங்கள் கடன்களை தீர்த்து வறுமையை நீக்கி செல்வ செழிப்புடன் வாழ அருள்புரியுங்கள்.