வாலாஜா நகராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய பஸ்நிலையம் உள்ளது. இதில் தற்போது 36 கடைகள் மற்றும் ஒரு ஒட்டல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காகவும், பஸ்கள் வந்து செல்ல ஏதுவாகவும் புதிய பஸ் நிலையம் அமைக்க 72.8 கோடி நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் பஸ் நிலையத்திலிருந்த பழைய கட்டிடம் மற்றும் கடைகள் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. அதன் படி அப்பகுதியில் உள்ள கடைகளின் மேற்கூறைகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஒரு சில நாட்களில் கட்டிடங்கள் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பஸ்நிலையம் விரிவாக்கம் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.