வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த தாராபடவேடு அண்ணாமலை நகர், அருக்குமேடு, ஜோதி நகர், சத்தியா நகர், மதிநகர் பகுதியை சேர்ந்த, 50 பேர் நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டம், ஆத்துார் அருகேயுள்ள முருகன் கோவிலுக்கு டூரிஸ்ட் பஸ்சில் சென்றனர். பஸ்சை ராணிப்பேட்டை மாவட்டம், அரும்பூரை சேர்ந்த முனிரத்தினம், 25 ஓட்டினார். அரூர்-சேலம் நான்குவழி சாலையில், எருமியாம்பட்டியில் சாலைப்பணிக்காக

இருவழிச்சாலை ஒருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

அதிகாலை, 4:20 மணிக்கு அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது டூரிஸ்ட் பஸ்சும், எதிரே வந்த பார்சல் சர்வீஸ் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில், பஸ்சில் பயணம் செய்த பாலசுப்பிரமணி, 50, மாலா, 38, விஜயா, 60, தர்மலிங்கம், 44, காந்தா, 43, பவானி, 23, செல்லியம்மாள், 62, வெள்ளை, 51, சுந்தரி, 60, ராமு, 55, வாழப்பாடி அடுத்த பள்ளதாதனுாரை சேர்ந்த லாரி டிரைவர் மகாலிங்கம், 47 ஆகிய, 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்சில் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.