ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பிரதான சாலைகளில் ஒன்றான ஆரணி செல்லும் சாலை அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள பஜார் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.

இந்த கடையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுபிரியர்களினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பெரிதும் இடையூறாக இருந்து வந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து டாஸ்மாக் கடையை மூடும்படி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல் இங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இன்றி அமைதியாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.