சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சுவலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி கண்ணீர் விட்டு கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டிலும், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையிலும் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.