ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் நேற்று முன்தினம் அங்குள்ள திருமண மண்டபத்தில் காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்கள் மண்டபத்தின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று மாலை மண்டபத்தின் மேலாளர் மற்றும் மேட்டு காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற தபால் ஊழியர் ராஜாங்கம் ஆகிய இருவரும் பேனரை கழட்டி அகற்றினர். அப்போது திடீரென காற்றுடன் மழை பெய்தது. காற்றும் வீசியதில் பேனர் கிழிந்து அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்துள்ளது.

இதில் இவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் அவர்களை காரில் ஏற்றி சென்று கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவர்களை பரிசோதித்த போது ராஜாங்கம் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.