இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வனத்துறை மூலம் தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் கீழ் தேக்கு, பலா, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் விவசாய பெருமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் இந்த மரக்கன்றுகளை நட்டு பயன் பெறவேண்டும். மேலும், விவரங்களுக்கு வனச்சரக அலுவலகம், ஆற்காடு வனச்சரகம், ராணிப்பேட்டை என்ற முகவரியிலும், 99435 53964 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.