ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையை அடுத்த கொண்டக்குப்பம் கிராமத்தில் நோயாளியை ஏற்றி வருவதற்காக வாலாஜாப்பேட்டையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் நேற்று பொன்னை நோக்கி சென்றது.
கொண்டக்குப்பம் அருகே வந்த போது சென்னை நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக திடீரென 108 ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் ஊழியர் ஆகிய இருவரும் காயமின்றி உயிர்த்தப்பினர்.
இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.