குறள் : 1151

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.


மு.வ உரை :

பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல் பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

கலைஞர் உரை :

பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்

சாலமன் பாப்பையா உரை :

என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.


Kural 1151

Sellaamai Untel Enakkurai Matrunin

Valvaravu Vaazhvaark Kurai

Explanation :

If it is not departure tell me; but if it is your speedy return tell it to those who would be alive then.


Horoscope Today: Astrological prediction for June 24, 2023


இன்றைய ராசிப்பலன் - 24.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

24-06-2023, ஆனி 09, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 10.17 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் காலை 07.18 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் காலை 07.18 வரை பின்பு சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. 

 இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.


இன்றைய ராசிப்பலன் -  24.06.2023 | Today rasi palan - 24.06.2023

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைய சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும்.  

மிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கடகம்

இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபார முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். 

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். பிள்ளைகள் வகையில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினை குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.

கும்பம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும்.

மீனம்

இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026