குறள் : 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
மு.வ உரை :
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
கலைஞர் உரை :
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?
சாலமன் பாப்பையா உரை :
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
Kural 1149
Alarnaana Olvadho Anjalompu Endraar
Palarnaana Neeththak Katai
Explanation :
When the departure of him who said “fear not” has put me to shame before others why need I be ashamed of scandal.
Horoscope Today: Astrological prediction for June 22, 2023
இன்றைய ராசிப்பலன் - 22.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
22-06-2023, ஆனி 07, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 05.28 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 04.17 வரை பின்பு மகம். சித்தயோகம் பின்இரவு 04.17 வரை பின்பு அமிர்தயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர்- நவகிரக வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 22.06.2023 | Today rasi palan - 22.06.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். மற்றவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது. வியாபார சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
துலாம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் செயல்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம்.
மகரம்
இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
கும்பம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.