குறள் : 1138

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்.


மு.வ உரை :

இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர் மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.


கலைஞர் உரை :

பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்


சாலமன் பாப்பையா உரை :

இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.


Kural 1138

Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam

Maraiyirandhu Mandru Patum


Explanation :

Even the Lust (of women) transgresses its secrecy and appears in public forgetting that they are too chaste and liberal (to be overcome by it).


Horoscope Today: Astrological prediction for June 11, 2023


இன்றைய ராசிப்பலன் - 11.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

11-06-2023, வைகாசி 28, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.06 வரை பின்பு தேய்பிறை நவமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 02.32 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் பகல் 02.32 வரை பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 


இன்றைய ராசிப்பலன் - 11.06.2023 | Today rasi palan - 11.06.2023

மேஷம்

இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

ரிஷபம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

மிதுனம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 8.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் உண்டாகும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருந்தாலும் மதியத்திற்கு பிறகு நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு காலை 8.46 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும்.

துலாம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் நெருக்கடிகள் விலகி தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும்.

மீனம்

இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026