குறள் : 1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து.


மு.வ உரை :

(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும் நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.


கலைஞர் உரை :

எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்


சாலமன் பாப்பையா உரை :

காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.


Kural 1132

Nonaa Utampum Uyirum Matalerum

Naaninai Neekki Niruththu


Explanation :

Having got rid of shame the sufering body and soul save themselves on the palm yra horse.


Horoscope Today: Astrological prediction for June 05, 2023


இன்றைய ராசிப்பலன் - 05.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


05-06-2023, வைகாசி 22, திங்கட்கிழமை, பிரதமை திதி காலை 06.39 வரை பின்பு துதியை திதி பின்இரவு 03.49 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.23 வரை பின்பு பூராடம். சித்தயோகம் பின்இரவு 01.23 வரை பின்பு மரணயோகம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.


இன்றைய ராசிப்பலன் - 05.06.2023 | Today rasi palan - 05.06.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட பேச்சுவார்த்தைகளில் சாதகப்பலன் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.

ரிஷபம்

இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை சமாளிக்கலாம். பெரியவர்களின் அறிவுரை வியாபார வளர்ச்சிக்கு உதவும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.

துலாம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். 

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

மகரம்

இன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடைக்குப் பின் நல்லது நடக்கும். சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

மீனம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026