குறள் : 1131

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி.


மு.வ உரை :

காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

கலைஞர் உரை :

காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை

சாலமன் பாப்பையா உரை :

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.


Kural 1131

Kaamam Uzhandhu Varundhinaarkku Emam

Matalalladhu Illai Vali

Explanation :

To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more) there is no help so eficient as the palm yra horse.


Horoscope Today: Astrological prediction for Jun 04 2023


இன்றைய ராசிப்பலன் - 04.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

04-06-2023, வைகாசி 21, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி காலை 09.11 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 03.23 வரை பின்பு மூலம். மரணயோகம் பின்இரவு 03.23 வரை பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வாஸ்து நாள் காலை 9.51 மணி முதல் 10.27 மணி வரை. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 


இன்றைய ராசிப்பலன் - 04.06.2023 | Today rasi palan - 04.06.2023

மேஷம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் வேலையாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று நீங்கள் சோர்வுடன் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரித்தாலும் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

துலாம்

இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பாதியில் தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடரும். கடன் பிரச்சினைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். 

தனுசு

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

கும்பம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026