குறள் : 1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.
மு.வ உரை :
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார் ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார் அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.
கலைஞர் உரை :
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு
சாலமன் பாப்பையா உரை :
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.
Kural 1130
Uvandhuraivar Ullaththul Endrum Ikandhuraivar
Edhilar Ennum Iv Voor
Explanation :
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.
Horoscope Today: Astrological prediction for Jun 03 2023
இன்றைய ராசிப்பலன் - 03.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
03-06-2023, வைகாசி 20, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.17 வரை பின்பு பௌர்ணமி. விசாகம் நட்சத்திரம் காலை 06.16 வரை பின்பு அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 05.03 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். பௌர்ணமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 03.06.2023 | Today rasi palan - 03.06.2023
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொன் பொருள் சேரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
கடகம்
இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
சிம்மம்
இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
கன்னி
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் உதவியால் கடன் சுமை ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். செலவுகள் வரவுக்கு மீறி இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாக சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். வங்கி சேமிப்பு உயரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வீண் பேச்சை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் உதவியும் மகிழ்ச்சியை அளிக்கும்.