ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தொடங்க அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் அமைத்திட விருப்பமுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் பி பிரிவு, தரைதளம் என்ற முகவரியில் இம்மாதம் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.