ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பகுதியில் உள்ள சஞ்சீவிராய பள்ளி எதிரே காவேரிப்பாக்கம் - பாணாவரம் செல்லும் சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றுவருகிறது.

இந்த பணியின் காரணமாக சாலையின் குறுக்கே மண் கொட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு அந்த பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் மண் மீது ஏறி தலைகீழாக கவிழ்ந்தது.

அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 4 பேரும் எந்த சேதமும் இல்லாமல் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்தும் விசாரித்துவருகின்றனர்.