ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு திடீரென மழை பரவலாக பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கலவை தாலுக்கா முழுவதும் பெய்து வரும் மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த திடீர் மழையால் கலவை தாலுகாவில் 15.20 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.