அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையிலான போலீசார் நகரின் பலபகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று காலை சுவால்பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது தர்மராய தெருவில் உள்ள ஒரு கடையின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டர் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் நெமிலியை அடுத்த திருமால்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 22) என்பதும், ஸ்கூட்டரை திருட முயன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து சந்தோஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.