ராணிப்பேட்டை அருகே உள்ள வில்வநாதபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்பாபு (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்தார். அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து மகேஷ்பாபு ராணிப்பேட்டை போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டைபோலீசார் ராணிப்பேட்டை பாலாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட, சோளிங்கர் அருகே உள்ள கொடைக்கல் காலனி பகுதியை சார்ந்த ஆகாஷ் (21) என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் மகேஷ்பாபுவின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.