Worker fell while cutting a tree in private school and died
வாலாஜா அடுத்த இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). இவர் நேற்று ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம் உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.