ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரத்தைச் சேர்ந்தவர் தனியார் கல்லுாரி மாணவர் அருண்குமார், 18. அதே ஊரைச் சேர்ந்தவர் சச்சின், 17. இவரது நண்பர், காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம், 16.

மூவரும் நேற்று காலை, 7:00 மணிக்கு ஒரே, 'ஹோண்டா பைக்'கில், வேலுார் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பாக்கம் பி.டி.ஓ., அலுவலகம் அருகே சென்றனர்.

அப்போது, எதிரே வந்த மணல் லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதியதில், அருண்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மருத்துவமனை செல்லும் வழியில் சச்சின் பலியானார்.

வாலாஜா அரசு மருத்துவமனையில் ஜீவானந்தம் சேர்க்கப்பட்டார். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.