Manjapai automatic machine for public use in Ranipet Uzhavar santhai.
ராணிப்பேட்டை உழவர் சந்தையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் ரூ.1.50லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.
இந்த மஞ்சப்பை இயந்திரத்தில் 500 எண்ணிக்கையிலான மஞ்சப்பைகளை நிரப்ப முடியும். மேலும், தொடு உணர்வு இந்த இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. இது 30 வாட் மின்சா ரத்தில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி இயந்திரத்தில் ₹10 நாணயம் அல்லது இரண்டு ₹5 நாணயம் அல்லது 10₹ நோட்டு செலுத்தி ஒரு மஞ்சப்பையை பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.