நெமிலி அருகே கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சிற்பங்கள் சேதமடைந்தன. ஓயர்களும் தீப்பற்றி எரிந்தன.
மின்னல் தாக்கியது
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த மேலேரி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த மழையின் போது மேலேரியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தின் மீதிருந்த சிலைகள் பலத்த சேதமடைந்தன. மேலும் கோவிலில் உள்ள மின்ஒயர்கள் பற்றி எரிந்தது. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
சீரமைப்பு
இந்த சம்பவம் குறித்து அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்துவந்து பார்வையிட்டனர். மேலும் சேதமடைந்த சிலைகள் மீண்டும் சீரமைக்கும் பணிகள் நடை பெற்றுவருகிறது.
இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.