For the first time in the history of Tamil Nadu.. the hottest temperature ever.. 115 degrees in Arakkonam
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக முதல் முறையாக அரக்கோணத்தில் 115 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியில் வர முடியாமல் தவித்தனர்.
தமிழ்நாட்டில் தற்போது கத்திரி வெயில் காலம் நடக்கிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான புயல் தற்போது மியான்மரில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது வங்கக் கடல் பகுதியில் இருந்து ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சியதால், இந்தியாவின் தரைப்பகுதியில் காற்றில் ஈரப்பதம் குறைத்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி படிப்படியாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று காலையில் இருந்தே தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. இன்று மதியம் 12 மணி அளவில் வெப்பம் அதிகரித்து வந்தது. சென்னையில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழ்நாட்டில் இந்த காலத்தில் என்றும் இல்லாத அளவாக அரக்கோணத்தில் 115 டிகிரி வெயில் ெகாளுத்தியது. அருப்புக் கோட்டை 111 டிகிரி, குடியாத்தம், திண்டுக்கல் 109, ஆவடி 108, ஆம்பூர், சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர் 106, அம்பத்தூர் 104டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.