குறள் : 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
மு.வ உரை :
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
கலைஞர் உரை :
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!
சாலமன் பாப்பையா உரை :
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.
Kural 1123
Karumaniyir Paavaainee Podhaayaam Veezhum
Thirunudharku Illai Itam
Explanation :
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.
Horoscope Today: Astrological prediction for May 27, 2023
இன்றைய ராசிப்பலன் - 27.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
27-05-2023, வைகாசி 13, சனிக்கிழமை, சப்தமி திதி காலை 07.43 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மகம் நட்சத்திரம் இரவு 11.43 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 11.43 வரை பின்பு சித்தயோகம்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 27.05.2023 | Today rasi palan - 27.05.2023
மேஷம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் தரும். எதிலும் சிந்தித்து செய்வது நல்லது.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோருடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.
மிதுனம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து சற்று முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது உத்தமம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
விருச்சிகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.
தனுசு
இன்று உடன் பிறந்தவர்கள் வழியில் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வெளி வட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். சுபமுயற்சிகளையும் வெளிப் பயணங்களையும் சற்று தள்ளி வைப்பது நல்லது. வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.
கும்பம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிட்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் வெளி வட்டார நட்பு கிடைக்கும்.
மீனம்
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.