குறள் : 1122

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.


மு.வ உரை :

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள் உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

கலைஞர் உரை :

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு

சாலமன் பாப்பையா உரை :

என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.


Kural 1122

Utampotu Uyiritai Ennamar Ranna

Matandhaiyotu Emmitai Natpu

Explanation :

The love between me and this damsel is like the union of body and soul.


Horoscope Today: Astrological prediction for May 26, 2023


இன்றைய ராசிப்பலன் - 26.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

26-05-2023, வைகாசி 12, வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சப்தமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 08.50 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00


இன்றைய ராசிப்பலன் - 26.05.2023 | Today rasi palan - 26.05.2023

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

ரிஷபம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன் சுமை குறையும்.

கடகம்

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனமகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மன அமைதி ஏற்படும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026