குறள் : 1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
மு.வ உரை :
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
கலைஞர் உரை :
இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்
சாலமன் பாப்பையா உரை :
என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!
Kural 1121
Paalotu Thenkalan Thatre Panimozhi
Vaaleyiru Ooriya Neer
Explanation :
The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.
Horoscope Today: Astrological prediction for May 25, 2023
இன்றைய ராசிப்பலன் - 25.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
25-05-2023, வைகாசி 11, வியாழக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 05.20 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூசம் நட்சத்திரம் மாலை 05.53 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 25.05.2023 | Today rasi palan - 25.05.2023
மேஷம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.
கடகம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
சிம்மம்
இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு மனசங்கடங்கள் தோன்றும். முயற்சி செய்தால் எடுக்கும் காரியத்தில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணி சுமையை குறைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடன்கள் ஓரளவு குறையும்.
தனுசு
இன்று நீங்கள் எதிர்பாராத வகையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் பிறரை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.
மகரம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பெண்கள் வகையில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நற்பலன்கள் கிட்டும். வேலையில் சக ஊழியர்கள் ஆதுரவாக செயல்படுவார்கள்.
மீனம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.