குறள் : 1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு

நல்ல படாஅ பறை.


மு.வ உரை :

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால் அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

கலைஞர் உரை :

அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்

சாலமன் பாப்பையா உரை :

என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.


Kural 1115

Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku

Nalla Pataaa Parai

Explanation :

No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.


Horoscope Today: Astrological prediction for May 19, 2023


இன்றைய ராசிப்பலன் - 19.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

19-05-2023, வைகாசி 05, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி இரவு 09.23 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் காலை 07.29 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். சர்வ அமாவாசை. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.  

இராகு காலம் | Indraya Raagu Kalam

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00


இன்றைய ராசிப்பலன் - 19.05.2023 | Today rasi palan - 19.05.2023

மேஷம்

இன்று வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உங்களின் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கடகம்

இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். தொழிலில் சற்று மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெற்று நெருக்கடிகள் சற்று குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு மன உளைச்சலும் குழப்பமும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் செய்வது உத்தமம். 

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.35 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

இன்று குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வளரச்சிக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மகரம்

இன்று உறவினர்களின் வகையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோககத்தில் உங்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு.

மீனம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று கால தாமதமாகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அ-னுசரித்து செல்வது நல்லது.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026