குறள் : 1113

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.


மு.வ உரை :

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன் முத்தே பல் இயற்கை மணமே மணம் வேலே மை உண்ட கண்.

கலைஞர் உரை :

முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!

சாலமன் பாப்பையா உரை :

மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!


Kural 1113

Murimeni Muththam Muruval Verinaatram

Velunkan Veyththo Lavatku

Explanation :

The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth are pearls; her breath fragrance; and her dyed eyes lances.


Horoscope Today: Astrological prediction for May 18, 2023


இன்றைய ராசிப்பலன் - 18.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

18-05-2023, வைகாசி 04, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.43 வரை பின்பு அமாவாசை. அஸ்வினி நட்சத்திரம் காலை 07.22 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் காலை 07.22 வரை பின்பு சித்தயோகம்.  

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.


இன்றைய ராசிப்பலன் - 18.05.2023 | Today rasi palan - 18.05.2023


மேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தடைப்பட்ட பணவரவுகள் கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதபலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அனுகூலமான பலன்கள் கிட்டும். எதிர்பாராத உதவியால் கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் சற்று குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை. 

துலாம்

இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகள் பாராட்டப்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

தனுசு

இன்று உடன்பிறப்புகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இன்று உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். சுபகாரியங்களில் மந்த நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். எதிலும் யோசித்து செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு புது தெம்பைத் தரும். 

மீனம்

இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் துணையாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026