குறள் : 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
மு.வ உரை :
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால் இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
கலைஞர் உரை :
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ஹஹஇவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்
சாலமன் பாப்பையா உரை :
குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.
Kural 1114
Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum
Maanizhai Kannovvem Endru
Explanation :
If the blue lotus could see it would stoop and look at the ground saying I can never resemble the eyes of this excellent jewelled one.
Horoscope Today: Astrological prediction for May 17, 2023
இன்றைய ராசிப்பலன் - 17.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
17-05-2023, வைகாசி 03, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 10.29 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. ரேவதி நட்சத்திரம் காலை 07.38 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். பிரதோஷ விரதம். மாத சிவராத்திரி சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 17.05.2023 | Today rasi palan - 17.05.2023
மேஷம்
இன்று உங்களுக்கு இனிய செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்பின்றி ஈடுபடுவீர்கள். வீண் பேச்சால் குடும்ப ஒற்றுமை சற்று குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும்.
மிதுனம்
இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழிலில் இ-ருந்த நெருக்கடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நற்செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்
இன்று எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை சற்று குறையும்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
துலாம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
தனுசு
இன்று உங்களுக்கு அசையா சொத்து வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களால் இருந்த பிரச்சினைகள் தீரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். வருமானம் பெருகும்.
மீனம்
இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.