குறள் : 1111

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.


மு.வ உரை :

அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய் நீ வாழ்க யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

கலைஞர் உரை :

அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி

சாலமன் பாப்பையா உரை :

அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!


Kural 1111

Nanneerai Vaazhi Anichchame Ninninum

Menneeral Yaamveezh Paval

Explanation :

May you flourish O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.


Horoscope Today: Astrological prediction for May 15, 2023


இன்றைய ராசிப்பலன் - 15.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

15-05-2023, வைகாசி 01, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 01.03 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 09.08 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் காலை 09.08 வரை பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.


இன்றைய ராசிப்பலன் - 15.05.2023 | Today rasi palan - 15.05.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது உத்தமம்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நிலை சுறுசுறுப்பாக இருக்கும். சுபசெலவுகள் ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்ற சில இடையூறுகள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

கன்னி

இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.

துலாம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

தனுசு

இன்று அலுவலகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். கோபத்தை குறைத்து எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். 

மீனம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றியை ஏற்படுத்தும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026