குறள் : 1107

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.


மு.வ உரை :

அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல் தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

கலைஞர் உரை :

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது

சாலமன் பாப்பையா உரை :

அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.


Kural 1107

Thammil Irundhu Thamadhupaaththu Untatraal

Ammaa Arivai Muyakku

Explanation :

The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one’s own house and live by one’s own (earnings) after distributing (a portion of it in charity).


Horoscope Today: Astrological prediction for May 11, 2023


இன்றைய ராசிப்பலன் - 11.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


11-05-2023, சித்திரை 28, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 11.28 வரை பின்பு தேய்பிறை சப்தமி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.37 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.


இன்றைய ராசிப்பலன் - 11.05.2023 | Today rasi palan - 11.05.2023


மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் தோன்றும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணியில் கவனம் தேவை.

கடகம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

தனுசு

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சுப காரியங்கள் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மீனம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026