குறள் : 1103

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.


மு.வ உரை :

தாமரைக் கண்ணனுடைய உலகம் தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.

கலைஞர் உரை :

தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

சாலமன் பாப்பையா உரை :

தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?


Kural 1103

Thaamveezhvaar Mendrol Thuyilin Inidhukol

Thaamaraik Kannaan Ulaku

Explanation :

Can the lotus-eyed Vishnu’s heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?


Horoscope Today: Astrological prediction for May 07, 2023


இன்றைய ராசிப்பலன் - 07.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

07-05-2023, சித்திரை 24, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 08.16 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அனுஷம் நட்சத்திரம் இரவு 08.21 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.


இன்றைய ராசிப்பலன் - 07.05.2023 | Today rasi palan - 07.05.2023

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக நடைபெறும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். 

கடகம்

இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவி மகிழ்ச்சியை அளிக்கும்.

கன்னி

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கல் ரீதியாக லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும்.

மகரம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நவீன பொருட்கள் வீடு வந்து சேரும், எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026