குறள் : 1099

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

மு.வ உரை :

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல் அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

கலைஞர் உரை :

காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்

சாலமன் பாப்பையா உரை :

முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

Kural 1099

Edhilaar Polap Podhunokku Nokkudhal
Kaadhalaar Kanne Ula

Explanation :

Both the lovers are capable of looking at each other in an ordinary way as if they were perfect strangers.

Horoscope Today: Astrological prediction for May 02, 2023


இன்றைய ராசிப்பலன் - 02.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


02-05-2023, சித்திரை 19, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 11.18 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திரம் நட்சத்திரம் இரவு 07.41 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் இரவு 07.41 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 02.05.2023 | Today rasi palan - 02.05.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சினை குறையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் தோன்றும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவினாலும் சிறுசிறு மனஸ்தாபங்களும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதப்பலன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் படிப்பு விஷயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

தனுசு

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் நற்பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

மகரம்

இன்று உங்களுக்கு வேலையில் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதப் பலன் கிட்டும். நெருங்கியவர்கள் வகையில் கிடைக்கும் உதவிகளால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது, வயதில் பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வேலையில் கவனம் தேவை. 

மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026