குறள் : 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
மு.வ உரை :
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார் ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
கலைஞர் உரை :
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்
சாலமன் பாப்பையா உரை :
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.
Kural 1128
Nenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal
Anjudhum Vepaak Karindhu
Explanation :
As my lover is in my heart I am afraid of eating (anything) hot for I know it would pain him.
Horoscope Today: Astrological prediction for Jun 01 2023
இன்றைய ராசிப்பலன் - 01.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
01-06-2023, வைகாசி 18, வியாழக்கிழமை, துவாதசி திதி பகல் 01.39 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. சித்திரை நட்சத்திரம் காலை 06.48 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் காலை 06.48 வரை பின்பு அமிர்தயோகம். பிரதோஷ விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 01.06.2023 | Today rasi palan - 01.06.2023
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் வழியில் மனநிம்மதி குறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.
கடகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.
கன்னி
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
விருச்சிகம்
இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£க இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்
இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் கவனம் தேவை.