Drunken worker dies after falling into canal in Arcot.
ஆற்காட்டில் குடிபோதையில் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் பஜார் வீதி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாய் கழிவு நீர் கால்வாயாக மாறி உள்ளது.
இந்நிலையில் இந்த கால்வாயில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், சடலத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆற்காடு கலவை ரோட்டைச் சேர்ந்த சலீம் (45) என்பதும், கூலித் தொழிலாளியான இவர் குடிபோதையில் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது. மேலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.